Monday, 22 October 2012

நபி(ஸல்) உலகத்திற்கோர் முன்மாதிரி!உயர்ந்த இலட்சியம், குறைவான வசதிகள், வியப்பூட்டும் வெற்றி ஆகிய இம்மூன்றும் தான் மனித நுண்ணறிவை, மனித ஆற்றலை அளந்திடும் அளவுகோல்கள் என்றால் இந்த நவீன வரலாற்றின் எந்த மாமனிதரையும் ‘முகம்மத்’ உடன் ஒப்பிட எவருக்குத்தான் துணிச்சல் வரும்? புகழ் மிக்க மனிதர்களெல்லாம் ஆயுதங்களை உருவாக்கினார்கள்; சட்டங்களை இயற்றினார்கள்; பேரரசுகளை நிறுவினார்கள். அவர்கள் செய்ததெல்லாம் இவைதாம்! பெரும்பாலும் தமது கண்களின் முன்பே சிதைந்து விழுந்துவிட்ட உலகாயதக் கோட்டைகளைத்தான் அவர்களால் நிறுவ முடிந்தது. ஆனால் முகம்மத் போர்ப்படைகள், சட்டமியற்றும் சபைகள், பேரரசுகள், மக்கள் சமுதாயங்கள் ஆகியவற்றை மட்டும் பாதித்து அவற்றை மட்டும் வெற்றி கொள்ளவில்லை; அவற்றுடன் அன்றைய உலகின் மூன்றிலொரு நிலப்பரப்பில் வசித்து வந்த கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களையும் ஈர்த்தார். வழிபாட்டுத் தலங்களையும், சமய நெறிகளையும், பல்வேறு கருத்துகளையும், கொள்கைகளையும், நம்பிக்கைகளையும் ஆன்மாக்களையும் ஈர்த்து அவற்றில் தமது தாக்கங்களை பதித்தார். 

வெற்றியின் போது அவர் காட்டிய பொறுமை, பணிவு, சகிப்புத்தன்மை தாம் ஏற்றுக்கொண்ட ஒரு கருத்துக்காக தம்மையே முழுமையாக அர்பணித்துக்கொண்ட அவரது உயர் விருப்பம், அரசாட்சியை அடைந்திட வேண்டும் என்ற குறுகிய எண்ணம் ,இல்லாமல் உலகபற்றற்று வாழ்ந்து வந்த நிலை, அவரது முடிவில்லாத தொழுகைகள், பிரார்த்தனைகள், இறைவனுடனான மெய்ஞ்ஞான உரையாடல்கள் அவரது மரணம் மரணத்திற்கு பின்னரும் அவர் அடைந்த வெற்றி இவையனைத்துமே அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்றோ மோசடி குணம் உடையவர் என்றோ பறை சாற்றிட வில்லை. மாறாக சமயக்கொள்கை ஒன்றை நிலை நாட்டிட அவருக்கிருந்த மனோ உறுதியைத்தான் பறைசாற்றுகின்றன’

‘உலகில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் முதன்மையானவராக, முகம்மதை நான் தெரிவு செய்தது சில வாசகர்களுக்கு வியப்பையும், வினாவையும் எழுப்பலாம். சமயஞ்   சார்ந்த மற்றும் சமயச்சார்பற்ற வட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றவர் மனித சரித்திரத்தில் அவர் ஒருவரே.’ – அல்போன்சு டி லாமார்ட்டின்,1854,PP 276 - 277

மேற்கூறிய அறிக்கைகளை மீண்டும் ஒருமுறை நன்றாக படியுங்கள் அதுவே போதுமானதாக ,ருக்கலாம் எம்பெமானார் (ஸல்) அவர்கள் நிச்சயமாக உலக மானிட சமுதாயத்தின் தன்னிகரற்ற முன்மாதிரி என்ற உண்மையினை. போர்களும், குழப்பங்களும், ஆதிக்கமும், னவெறியும், அரச பயங்கரவாதங்களூம் மேலோங்கியிருக்கும் தற்போதைய உலகில் மனிதன் தேடும் அன்பு, பண்பு, பாசம், சகோதரத்துவம், சகிப்புத்தன்மை, நீதி, நேர்மை ஆகியவற்றினை நபிகள் நாயகம் அவர்களின் அற்புதமான வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். உலகில் உள்ள அனைத்து துறைகளுக்குமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் முன்மாதிரி என்பதுபற்றி சில வற்றினை மட்டும் காண்போம்.

சிறப்பான மற்றும் எளிமையான ஆட்சியாளர்:

ஆடம்பர மாளிகை, சொகுசான வாகனம், ஆயிரக்கணக்கான உதவியாளர்கள், பல்லாயிரன கணக்கான காவல்துறையினரின் பாதுகாப்பு, விலை உயர்ந்த ஆடைகள் இவையே ஆட்சியாளர்களின் அடையாளங்களாக முன்னிறுத்தப்படுகின்றது. கம்யூனிஸ ஆட்சியாளர்கள் முதல் முதலாளித்துவ ஆட்சியளர்கள் வரை இவையே கடைபிடிக்கப்படுகிறது. 


இவை எவற்றையுமே எதிர்ப்பார்க்காத, ஏற்றுக்கொள்ளாத ஒரு ஆட்சியாளர்தான் எம்பெருமானார் (ஸல்) அவர்கள். வறுமையில் வாடும் சிறிய நாட்டின் ஆட்சியாளர்கள் கூட இதையே கெளரவமாக கடைபிடித்த போதும், கடைபிடிக்கும் போதும் வளம் கொழிக்கும் மிக பெரிய அரேபிய சாம்ராஜ்யத்தின் தன்னிகரற்ற ஆட்சியாளராக திகழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எக்காலத்திலும், எச்சூல்நிலையிலும் ஆடம்பரத்தினையும், வீண்விரயத்தினையும் துளியும் விரும்பவில்லை. மக்களின் வரிப்பணத்தினை மக்களுக்காகவே செலவிட்டார்கள். தற்போதைய உலகம் சந்திக்கும் மிகப்பெரிய பொருளாதார சிக்கல் (என்ற மாயையை) எதிர்கொள்ள ஆட்சியாளர்கள் சிக்கன நடவடிக்கையை கையாள வேண்டும் என்று தற்போதுதான் உலகம் ஒப்பாரி வைக்கிறது. ஆனால் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இவ்விஷயத்திலும் ஒரு முன்மாதியாக அன்றே வாழ்ந்துக்காட்டினார்கள். ஆடம்பரம் என்ற சுவடே தெரியாமல் சிறப்பான முறையில் நிர்வாகம் புரிந்தார்கள். அவர்கள் ஆட்சியில் காலத்தில் அவர்கள் சம்பாதித்தவை லட்சக்கண்க்கான மக்களின் உல்லங்களை மட்டுமே.

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்: மதீனாவாசிகளின் (சாதாரண) அடிமைப் பெண்களில் ஒருத்தி கூட இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கையைப் பற்றிய வண்ணம் (தன் வாழ்க்கைத் தேவை நிமித்தமாக) தான் நாடிய இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்ல முடியும். (அந்த அளவிற்கு மிக எளிமையானவர்களாகவும் நபி(ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள்.) நூல்: புகாரி – பாகம் 6, அத்தியாயம் 78, எண் 6072

தற்போதைய ஆட்சியாளர்களை ,துபோன்று சந்திப்பது பற்றி கற்பனைதான் செய்ய முடியும். ஒரு சாதாரன குடிமகனும் வளமிக்க சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியான முஹம்மது நபி(ஸல்) அவர்களை எளிதில் சந்திக்க முடியும் என்றளவிற்கு எளிமையாக வாழ்ந்துக்காட்டினார்கள்.

நடுநிலைத்தவறாத நீதிபதி:

நடுத்தர மற்றும் ஏழமை மக்க்ளிடமிருந்து ஏறக்குறைய விலகி சென்றுவிட்ட ஒர் வார்த்தை இவ்வுலகில் இருக்கிறதென்றால் அது ‘நீதி’ என்ற வார்த்தையும் அதன் பயன்பாடுமே ஆகும். வசதிபடைத்தோர்களின் உரிமைச்சொத்தாக இன்று நீதி சென்றுவிட்டது. ஒருவர் நீதியை பெறவேண்டுமேயானால் அவர் லட்சங்களையும், கோடிகளையும் செலவழிக்க வேண்டியிருக்கிறது. நீதியின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையானது அற்று போவதற்கு முக்கிய காரணியாக விளங்குவது ஆட்சியாளர்களின் அலட்சியபோக்கே. ஒருவர் தவறு செய்கிறார் என்றால் அவரை தண்டிக்க வேண்டும் என்ற மன உருதி இருக்க வேண்டும். ஆனால் தற்போது உலகில் நாம் கண்பது என்ன? ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர் எவ்வளவு பெரிய தவறினை செய்தாலும் அ வ ர் தண்டிக்கப்படுவதில்லை. ஆனால் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அப்படி வாழவில்லை. தவறு யார் செய்தாலும் தண்டிக்கபட வேண்டியர்கள் என்பதில் உறுதியாக இருந்து இதிலும் ஓரு முன்மாதிரியை காண்பித்திருக்கிறார்கள்

முஹம்மது நபி(ஸல்) அவர்கள்  கூறினார்கள்: ‘நான் ஒரு மனிதன்தான். நீங்கள் என்னிடம் உங்கள் வழக்குகளைக் கொண்டு வருகிறீர்கள். உங்களில் ஒருவர் மற்றொருவரை விடத் தம் ஆதாரத்தை எடுத்துவைப்பதில் வாக்கு சாதுரியமிக்கவராக இருக்கலாம். நான் கேட்பதை வைத்து அதற்கேற்ப தீர்ப்பு வழங்கிவிடுவேன். எவருக்கு நான் அவரின் சகோதரரின் உரிமையில் சிறிதை (உண்மை நிலை அறியாமல் வாதங்களை வைத்து) கொடுக்க வேண்டுமென்று தீர்ப்பளித்து விடுகிறேனோ அதை அவர் எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில், அப்போது நான் அவருக்குப் பெயர்த்துக் கொடுப்பதெல்லாம் நரக நெருப்பின் ஒரு துண்டைத்தான்’ நூல்: புகாரி – பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7169

சிறந்த போர்படைத் தளபதி:

இன்று உலகில் ஏறக்குறைய அனைத்து நாடுகளுமே ஏதோ ஒரு வகையில் போரில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன. சில நாடுகள் நேரடியாகவும், சில நாடுகள் மறைமுகமாகவும் போரில் ஈடுப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவை இரண்டிற்கும் உள்ள ஓரே ஒற்றுமை அனைத்து நாடுகளுமே கோழைததனமாக பெண்களையும், குழந்தைகளையும் கொல்வது பற்றி பெரிதாக வருந்துவதில்லை. அமெரிக்காவும் அதன் கள்ளக்குழந்தை இஸ்ரேலும் பெண்களையும், குழந்தைகளையும் கொல்வதுதான் போர் தந்திரமாகவே கையாளுகின்றன. ஆனால் எம்பெருமானார் (ஸல்) அவர்களோ மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தின் தலைவராக பல போர்களை சந்தித்திருக்கிறார்கள் எம்பெருமானார் (ஸல்) அவர்க்ளோ எச்சூழ்நிலையிலும் பெண்களையும் குழந்தைகளையும் தாக்கவுமில்லை, போரில் ஈடுபடுத்தவுமில்லை. அதனை வலியுறுத்தவும் இல்லை. மாறாக ஒவ்வொரு போரி லும் பெண்களுக்கு தக்க பாதுகாப்பினை வழங்கினார்கள். ஆப்கானிஸ்தான், ஈராக் இன்னும் பல நாடுகளில் அமெரிக்க பாதுகாப்பு (?) படையும், பாலஸ்தீனில் இஸ்ரேல் பாதுகாப்பு (?) படையும், காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு (?) படையும் பெண்களின் கற்புகளை சூரையாடுவதை வழக்கமாக கொண்டு அநியாயம் புரியும் இராணுவத்திற்கும் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் இந்த நடைமுறையானது மிகப்பெரிய வழிகாட்டுதலாகும்.

‘நபி(ஸல்) அவர்கள் பங்கெடுத்த புனிதப் போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைக் கண்டித்தார்கள்’ நூல்: புகாரி – பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3014

‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பங்கெடுத்த புனிதப் போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைத் தடை செய்தார்கள்’ நூல்: புகாரி – பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3015

நேர்மையான ஆட்சியளர்:

தற்போதைய உலகின் ஏறக்குறைய அனைத்து நாட்டின் தலைவர்களுமே மிகப்பெரும் கோடீஸ்வரர்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஒருவர் மற்றோருவருக்கு சலைத்தவரில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இவர்களில் பலர் ஏழ்மைநிலையில் தங்களின் வாழ்வை கடத்தியவர்களாகவே இருந்திருக்கின்றனர். ஆட்சிக்கு வந்த பிறகு தங்களின் அதிகாரங்களை தவறான முறையில் பயன்படுத்தி தங்களின் சுய வசதியினை அதிகரித்துக்கொண்டனர். தங்களின் பெயரிலும், தம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் பெயரிலும் வியாபார நிறுவனங்களையும் நடத்திக்கொண்டிருக்கின்றனர். இந்தியாவை பொருத்தவரை அரசியலுக்கு இதுதான் முக்கிய தகுதியாகவே பார்க்கப்படுகிறது. செல்வம் செழிக்கும் பணக்கார நாடுகள் முதல் வறுமையில், பஞ்சத்திலும் வாடும் ஏழ்மை நாடுகள் வரை இதுவே வழமையாக இருக்கிறது. ஆனால் வளம் கொழிக்கும் மிகப்பெரிய அரேபிய சாம்ராஜ்ஜியத்தின் தலைவரான முஹம்மது நபி(ஸல்) அவர்களோ தாங்களின் தனிப்பட்ட வாழ்வையும், ஆட்சியின் அதிகாரத்தினையும் என்றைக்குமே இணைத்ததில்லை. சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தி என்ற அதிகாரத்தினை தமக்காகவோ தமது குடும்ப மற்றும் நண்பர்களின் நன்மைக்காக வளைத்துக்கொடுக்கவில்லை. செல்வ சீமாட்டியான அன்னை கதீஜா (ரலி) அவர்களை மணந்த முஹம்மது நபி(ஸல்) அவர்களோ மிகப்பெரிய சக்கரவர்த்தியாக இருந்தும் இவ்வுலகினைவிட்டு பிரியும்போது கடன் பட்டவராகவே பிரிந்தார்கள்.

‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘(நபிமார்களான) எங்கள் சொத்துகளுக்கு வாரிசாக யாரும் வரமுடியாது. நாங்கள்விட்டுச் செல்வதெல்லாம் தர்மம் தான்’ என்று கூறினார்கள்; மேலும், முஹம்மதின் குடும்பத்தார் உண்பதெல்லாம் ,ச்செல்வத்திலிருந்து தான்; அதாவது அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து தான் அதில் தங்கள் உணவுச் செலவை விட அதிகமாக எடுத்துக்கொள்ள அவர்களுக்கு உரிமையில்லை’ நூல்: புகாரி – பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3712

இனவெறியை ஒழித்தவர்:

நிறத்தால் நாங்களே உயர்ந்தவர்கள் என்ற  வெள்ளையர்களின் ஆதிக்கவெறியும், பிறப்பால் நாங்களே உயர்ந்தவர்கள் என்ற மேல்ஜாதியினரின் ஆதிக்கவெறியும் கருப்பு நிறத்தவர்களுக்கும், கீழ்ஜாதியினருக்கும் இழைத்த அநீதிகளும், அக்கிரமங்களும் ஏராளம். கருப்பு நிறத்தவர்களின் உயிர் உடைமைகள் துச்சமாக மதிப்பக்கபட்டு அவர்கள் சொல்லெனா துன்பத்திற்கும் , துயரத்திற்கும் ஆளான வரலாறுகளை நாம் ஓரளவுக்கேனும் அறிந்தே வைத்திருக்கின்றோம். இன்றும்கூட அத்தகைய சம்பவங்கள் உலகில் நடந்துக்கொண்டிருப்பதை முழுமையாக நாம் மறுத்துவிட முடியாது. நாகரிகத்தின் உச்சியில் நாங்களே இருக்கிறோம் என தங்களை தாங்களே பறைச்சாற்றிக்கொள்ளும் அமெரிக்காவும் கூட ஒரு கருப்பு நிறத்தவரை தன் நாட்டின் முதல் குடிமகனாக  சமீப மாதங்களில்தான் தேர்ந்தெடுக்கமுடிந்தது. அதுவும் சிலர் கூறுகையில் தற்போதைய அமெரிக்க கருப்பு நிற அதிபர் நிறத்தால் மட்டுமே கருப்பர். ஆனால் என்றைக்குமே  அவர் தன்னை ஒரு கருப்பு நிறத்தவர் என்று கூறிக்கொள்வதுமில்லை. அதனை வெளிக்காட்டுவதுமில்லை என்று கூறுகின்றனர். வெள்ளைநிற அமெரிக்கர்கள்  மற்றும் ஐரோப்பியர்களில் கணிசமானோர் இன்னும் முழுமனதுடன் அவரை தலைமை தாங்கும் தகுதிவுடையவராக ஏற்றுக்கொள்ளவில்லை என்ற தகவலும் இருக்கத்தான் செய்கிறது. சமீபத்தில் உயிரழந்த உலக புகழ்பெற்ற பாப் இசைப்புகழ் மைக்கேல் ஜாக்சன் கூட பிறப்பால் கருப்பினத்தவரே. ஆனால் தாம் கருப்பினததைச் சார்ந்தவராக இருப்பதனால் உலகம்  தன்னை அங்கீகரிக்காது என்ற தாழ்வுமன்ப்பான்மையினால் அறுவைசிகிச்சையின் மூலம் தன்னை  வெள்ளை நிறத்தவராக மாற்றிக்கொண்டார். ஆனால் முஹம்மது நபி(ஸல்) அவர்களோ நிறத்திற்கோ, இனத்திற்கோ என்றைக்குமே முக்கியத்துவம் கொடுத்ததுமில்லை, பாகுபாடு காட்டியதுமில்லை. குறிப்பாக கருப்பு நிற அடிமையாக வாழ்ந்துக்கொண்டிருந்த பிலால் (ரழி) அவர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து அவர்களுக்கு முதன்முதலில் பாங்கு சொல்லும் பெருமையை வழங்கியும், தமது உற்ற தோழராகவும் ஆக்கிகொண்டார்கள். நவநாகரீக உலகம் சந்திக்கும் இனவெறி பிரச்சனைகளுக்கும் எம்பெருமானாரே சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறார்கள்

முஹம்மது நபி(ஸல்) அவர்கள்  கூறினார்கள்: ‘உலர்ந்த திராட்சை போன்ற (சுருங்கிய) தலையுடைய அபிசீனிய (கறுப்பு நிற) அடிமையொருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் (அவரின் சொல்லைக்) கேளுங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்’ நூல்: புகாரி – பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7142

முஹம்மது நபி(ஸல்) அவர்களே மானிட சமுதாயத்தின் தலைச்சிறந்த முன்மாதிரி என்பதற்கு சான்றாக நவீன உலகம் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளை மட்டுமே அடிப்படையாக வைத்து சிலவற்றை மட்டுமே நாம் கண்டோம். சுருங்கசொல்லின் மகாசமுத்திரத்தின் ஒரு துளி நீரைப்போன்றதே நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் எம்பெருமானார் (ஸல்) அவர்களோ மனித சமுதாயம் சந்திக்கும் அரசியல், பொருளாதாரம், ஆட்சி அதிகாரம், நிர்வாகம், இனவெறி உட்பட அனைத்துப்பிரச்சனைகளுக்க்கும் முஹம்மது நபி(ஸல்) அவர்களே தலைச்சிறந்த முன்மாதிரியாவார்கள். ஆட்சியாளராகவும், நீதிபதியாகவும், போர்ப்படைத் தளபதியாகவும், சீர்த்திருத்தவாதியாகவும், குடும்பத்தலைவராகவும் அவரே சிறந்த முன்மாதிரியாவார்கள்

‘மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களின் மீது சர்ச்சைக்கிடமின்றி இன்று ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் ஒருவரின் மிகச்சிறந்த வாழ்க்கையை அறிந்திட நான் ஆவல்கொண்டேன். (அதை படித்தறியும் போது) இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஓர் இடத்தை பெற்றுத்தந்தது வாள் பலமல்ல என்று முன்னெப்போதையும் விட அதிகமாக நான் உணர்ந்தேன். நபிகள் நாயகத்தின் மாறாத எளிமைஇ தம்மை பெரிதாக கருதாமல் சாதாரணமானவராக நடந்து கொள்ளும் உயர் பண்பு, எந்நிலையிலும் வாக்குறுதியை பேணி காத்த தன்மை, தம் தோழர்கள் மீது அவர் கொண்டிருந்த ஆழிய அன்பு, அவரது அஞ்சாமை, இறைவன் மீதும் தமது பிரச்சார பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவைதாம் அவரது வெற்றிக்குக் காரணங்கள். இவையே உலக சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டு வந்து குவித்தன. எல்லாத்தடைகளையும் வெற்றி கொண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவைதாம் காரணமே தவிர வாள் பலம் அல்ல.’ -   மகாத்மா காந்தி

‘அவர்கள் எந்த நபித்துவ அந்தஸ்த்து தமக்குரியது என்று முதன் முதலாக வாதிடத் தொடங்கினார்களோ அதே அந்தஸ்த்தைதான் தமது ஆயுட்காலத்தின் இறுதியிலும் அவர் உரிமை கொண்டாடினார். முகம்மதை உண்மையான இறைத்தூதர் என்கிற அவரது வாதத்தை ஏற்றிட ஒவ்வரு வரும் சம்மதிப்பார்கள் என்று தைரியமாக நான் நம்புகிறேன். – போஸ்வெர்த் ஸ்மித்

0 கருத்துகள்:

Post a Comment