சிந்திக்க சில வசனம்: (நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி;) "நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி" என்று சொல்லும்;. அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை. அல் குர்ஆன் - 2:120!



சிந்திக்க சில பொன்மொழிகள்: 'நீங்கள் இகாமத் சொல்லுவதைச் செவியுற்றால் தொழுகைக்குச் செல்லுங்கள். அப்போது நீங்கள் அமைதியான முறையிலும் கண்ணியமாகவும் செல்லுங்கள். அவசரமாகச் செல்லாதீர்கள். உங்களுக்குக் கிடைத்த ரக்அத்களை (ஜமாஅத்துடன்) தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள். நூல்: புகாரி



Saturday, 19 November 2011

பதவி விலக மறுப்பதேன்?



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) 

பாரம்பர்யமும், சிறப்புமிக்க நமதூரில் தினம் தினம் நிகழும் நிகழுவுகளை பார்க்கும் போது நமதூர் ஜமாத்தார்களின் முக்கிய நோக்கமாக இருப்பது புதிய நிர்வாகமும், நேர்மையான நிர்வாகமும், ஊரின் ஒற்றுமையும், வளர்ச்சியும் என்பது தெளிவாக காணமுடிகிறது. மிரட்டல்களுக்கு அடிபணிந்து சென்றதின் விளைவினை நன்கு உணர்ந்துக்கொண்டோம். (ஆனாலும் மிரட்டல்கள் தொடர்வதையும் காணமுடிகிறது). 

இன்னார் வழக்கு போட்டிருக்கிறார், எங்களுக்கு இன்ன இன்ன பிரச்சனை இருக்கிறது, பள்ளிவாசல் கட்டுமான வேலை இன்னும் நிறைவுபெறவில்லை போன்ற காரணங்களைக்கூறி நிர்வாகிகள் விலகாமல் காலம் தாழ்த்துவது நமது ஊரின் முன்னேற்றத்திற்கும், ஒற்றுமையுக்கும் பெரும் இடையூராக இருப்பதை நன்கு உணரமுடிகிறது

தற்போதைய நிர்வாகிகளுக்கு உண்மையிலேயே ஊரின் நலனில் அக்கறையும், ஊரின் பாரம்பர்யத்தின் மீதும் பிடிப்பும் இருக்குமேயானால் பதவிகளை தாமாக ராஜினாமா  செய்வது சரியான ஒரு தீர்வாக இருக்கும். எத்தனை மனுக்கள் கொடுத்தாலும், எத்தனை விமர்சனங்கள் செய்தாலும், எத்தனை கண்டன போஸ்டர்களும், ஆர்பாட்ட போஸ்டர்கள் ஒட்டினாலும் பதவி விலகல் என்ற பேச்சிற்கே இடமில்லை என்று உடும்புபிடியாக பதவியில் இருப்பது எந்த வகையில் ஊரின் பாரம்பர்யம் காக்கப்படுகிறது என்பது நமக்கு தெரியவில்லை. 

வழக்குகள் இருப்பதால் தான் பதவி விலக மறுக்கிறோம் என்று கூறும் தற்போதை நிர்வாகம் (?) "பதவி விலகக்கோரிதான் அந்த வழக்கே தொடுக்கப்பட்டிருப்பதை ஏனோ வசதியாக மறந்துவிடுகிறார்கள் / மறுத்து விடுகிறார்கள். இதன் விளைவுகளும் பாதிப்புகளும் ஊரின் முன்னேற்த்திற்கும், செயல்பாடுகளுக்கும், ஜமாத்தார்களுக்குமே என்பது திண்ணம். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று ஒற்றுமையாக இருக்கும் ஜமாத்தார்கள் தற்போதைய நிர்வாகம் புதிய நிர்வாகம் தேர்வு செய்ய வழிவகை செய்யும் வகையில் உடனடியாக தாமாக முன்வந்து பதவி விலகி ஊரில் நிகழும் அனைத்து குழப்பங்களும் முடிவுக்கு கொண்டுவர வற்புறுத்த வேண்டும்


மாற்று ஏற்பாடு செய்த பிறகே பதவி விலகுவோம் என்று கூறும் தற்போதைய நிர்வாகத்தினருக்கும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் கவலை இருப்பது நியாயம்தான். ஆனால் மாற்று ஏற்பாடு / மாற்று நிர்வாகம் பற்றி முடிவு செய்யவேண்டியது ஊரின் ஜமாத்தார்கள் என்பதை உணர்ந்து பதவி விலகி புதிய நிர்வாகம் தேர்வு செய்ய வழிவிடவேண்டும். மாற்று ஏற்பாட்டினையும் நாங்களேதான் செய்வோம் என்று கூறுவது சர்வாதிகாரம் மற்றும் மன்னர் ஆட்சியின் அடையாளங்கள் என்பதை ஜமாத்தார்கள் புர்ந்துக்கொள்ளவேண்டும். .


தனிமனித காழ்ப்புணர்வுகளும், விரோதங்களும் இன்று நமது ஊரையே செயல்படாத ஒரு ஊராக மாற்றிவிட்டது. இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களிலாவது ஜமாத்தார்களை அடிமைகளாக நினைக்காமல், ஜமாத்தார்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஊரின் ஒற்றுமையையும், மேம்பாட்டினையும் நோக்கமாகக்கொண்டு செயல்படும் புதிய நிர்வாகிகளை தேந்தெடுக்க அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக்கொண்டு இடைவிடாது அனைத்து வகையிலும் முயற்சி செய்வோம். தற்போதைய அற்புதமான வாய்ப்பினை தவறவிடுவோமேயானால் மற்றுமொரு மூண்றாண்டு காலம் நமதூரின் நிலை .................????????????????????  ஜமாத்தார்களுக்கே வெளிச்சம்.

2 கருத்துகள்:

Anonymous said...

அன்பிற்கினிய சகோதரர்களே
வரலாற்று சிறப்புமிக்க ஊர், நம் ஊருக்கே பெருமை சேர்க்கும் ஜாமியா மிஸ்பாஹுல்ஹுதா,அமைதியான நிர்வாகம், அழகான சூழல் எல்லாம் எங்கே? எல்லாம் பத்து வருடத்திற்கு முன்னால். ஆனால் இன்றோ?...........?
ஒவ்வொரு நாளும் ஊர் நிர்வாகத்தினரின் அனுகுமுறை மிகவும் கேவலமாக போய் கொண்டுயிருக்கிறது, எல்லோரும் அறிந்ததே. எல்லாவற்றிற்கும் மேலாக நம் ஊரின் பாரம்பரியமிக்க குடும்பத்தை சேர்ந்த ஒரு சகோதரரின் வீட்டிற்கே நிர்வாகத்தின் சார்பாக 4,5 பேர் சென்று அதுவும் இரவு நேரத்தில் சென்று கணக்கு காண்பிக்க அழைத்திருக்கிரார்கள் என்றால், இவர்களின் நோக்கம் என்ன? வரலாற்றின் சிறப்புமிக்க முஸ்லீம் முஹல்லாவில் இதுதான்முறையா? பாரம்பரியம், பாரம்பரியம், என்று கூக்குரலிடும் இவர்களுக்கு இதுதான் பாரம்பரியமா?இந்த நிர்வாகத்தினரால் ஊரில் இருக்கும் நமக்குத்தான் கேவலமாக இருக்கிறது.இதற்கு பின்னனியில் யார் இருக்கிறார்கள்??????? யாராக இருந்தாலும் அதற்காக ஒரு நாள் வருத்தப்பட்டுத்தான் ஆக வேண்டும்

Anonymous said...

பாரம்பரியம், ஊரின் நலன் கருதி என்று ஊரை பாடாய் படுத்துகிறீர்கலே, தயவுசெய்து பாரம்பரியமிக்க நமது ஊரை கூறு போட்டு விடாதீர்கள். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், எல்லாவற்றிற்கும், நீங்களும் உங்களை சுற்றியுள்ளவர்களும்தான் பொறுப்பவீர்கள். நீடூர் சரித்திரம் உங்களை மறக்காது. யாருக்கு வேண்டும் இந்த பதவியும் ஊரின் பகைமையை சம்பாரித்து கொண்ட உங்களையெல்லாம் அறியாமையில் தள்ளிய அதிகாரமும். " அல்லாஹ்" ஒருவன் இருக்கிரான் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம்.

ஊர் நலம் விரும்பி.

Post a Comment