தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கான 2010 - 2011 ஆண்டிற்கான கல்வி உதவி தொகையை அறிவித்து உள்ளது. இந்த கல்வி தொகை 3 நிலைகளாக உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
1 - 10 வகுப்பு வரை:
தகுதிகள் :
- கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
- குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
- வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது
- ஒரு குடும்பத்தில் 2 பேருக்கு மேல் விண்ணப்பிக்க கூடாது
பயன்கள் :
- கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3500 ரூபாய்
- சேர்கை கட்டணம் அதிகபட்சமாக 500 ரூபாய்
- விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு
- கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
- ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.62 கோடி
சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
- சாதி சான்றிதல் நகல் (Xerox)
- பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
- வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும்
சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10, 2010
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26, 2010
கூடுதல் தகவல்கள் :
- புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (Premetric Fresh Appl) மற்றும் (Premetric Claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்
- ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை,இணைக்கப்பட்டுள்ள புதுப்பித்தல் விண்ணப்பத்தை (Renewal Form) மற்றும் (Premetric Claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
- பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்
11, 12 , ITI, டிப்ளமோ (Diploma), ஆசிரியர் பயிற்சி , பட்ட படிப்பு , பட்ட மேற்படிப்பு , ஆராய்ச்சி படிப்பு (Ph.D):
தகுதிகள்:
- கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
- குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
- வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது
பயன்கள் :
- கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3000 முதல் 7000 வரை
- 30% கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்
- விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு
- கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
- ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.60 கோடி
சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
- சாதி சான்றிதல் நகல் (Xerox)
- பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும்)
- வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும்)
- உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox) இணைத்து அனுப்புவது சிறந்தது
சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10, 2010
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26, 2010
கூடுதல் தகவல்கள் :
- புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (Premetric Fresh Appl) மற்றும் (Premetric Claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்
- ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை, புதுப்பித்தல் விண்ணப்பம் (Renewal Claim) (Premetric Claim Appl) மற்றும் (Premetric Claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
- பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்
தொழிற்படிப்புகள் ( Engineering )
தகுதிகள் :
- கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
- குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
- வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது
பயன்கள் :
- கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 20000 ரூபாய் அல்லது முழு கட்டணம் (இரண்டில் குறைந்தது)
- IIT (சென்னை), NIT(திருச்சி), Indian Institute of Tech and Design Management(காஞ்சிபுரம்), National Institute of Fashion Technology ஆகிய கல்வி கூடங்களில் பயிலும் மாணவர்களுக்கு முழு கல்வி உதவி வழங்கப்படும்
- 30% கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்
- விடுதி மற்றும் ஊக்க தொகைகள் வருடத்திற்கு 10000 வரை
- கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
- ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 8 கோடி
சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
- சாதி சான்றிதல் நகல் (Xerox)
- பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும்)
- வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும்)
- உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox) இணைத்து அனுப்புவது சிறந்தது
சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10, 2010
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26, 2010
கூடுதல் தகவல்கள் :
- புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (MCM Appl Form) விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்
- ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை, புதுப்பித்தல் விண்ணப்பத்தை (MCM Renewal Claim) பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
- பூர்த்தி செய்யப்பட விண்ணப்பத்தை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும், தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்
மேலும் விவரங்களுக்கு இந்த இணையதளத்தை பார்க்கவும்: http://www.tn.gov.in/bcmbcmw/welfschemes_minorities.htm

.jpg)
.jpg)